முதலமைச்சர் மீதான அவதூறு வீடியோ!...நடிகை ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்குப்பதிவு - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமான நடிகை  ஸ்ரீரெட்டி, கடந்த 2011ம் ஆண்டு வெளியான நேனு நானா அபத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக வெளிப்படையாக பல்வேறு புகார்களை அறிவித்த இவர், தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி அண்மையில் சமூக வலைதளங்களில் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு வீடியோக்களை வெளியிட்ட பேசியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது.

இதையடுத்து  தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,  விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defamation video against the chief minister actress sri reddy has filed a case against he


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->