அரசியலில் இருந்து விலகுவதாக துரைசாமி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுகவில் ஏற்பட்ட வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட நிலையில் துரை வைகோவின் அரசியலை கண்டித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அவை தலைவர் துரைசாமி கடிதம் எழுதியது பரபரப்பை உண்டாக்கியது. துரைசாமி எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த வைகோ "இரண்டு வருடமாக வராத துரைசாமி ஒரு கடிதம் கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்தில் இருக்கும்..?

கட்சியில் 99.99 சதவீத நபர்களுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. துரைசாமிக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருக்கலாம் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் நல்ல உணர்வு இருக்கிறது. 30 வருடமாக நாங்கள் போராடி வந்து விட்டோம் எத்தனையோ கஷ்டங்களை கடந்து கொண்டு வந்திருக்கிறோம். இன்னமும் கடந்து செல்வதற்கு தயாராக இருக்கிறோம். துரைசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. சிலவற்றை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம். ஜனநாயக முறைப்படி நாங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்" என பதில் அளித்து இருந்தார்.

இதற்கிடையே மதிமுக துணை பொதுச்செயலாளர் செஞ்சி மணி வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் "திருப்பூர் துரைசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு விரோதமாகவும் தன் சுய நலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். எனவே அவரை அவைத்தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். எனவே துரைசாமியை அவை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள திருப்பூர் துரைசாமி "எனது வீட்டில் போட்டி பொதுக்குழு நடத்தவில்லை. திமுக உட்பட வேறு எந்த கட்சியிலும் கட்டாயம் இணைய மாட்டேன். அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK Duraisamy announces retirement from politics


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->