#BREAKING | நடக்க கூடாதது நடந்துவிட்டது! திருச்சி சிவா - அமைச்சர் நேரு கூட்டாக பேட்டி!
minister kn nehru mp trichy siva dmk
அதிகார போட்டியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளதாக பேசப்பட்ட நிலையில், இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி, ரவுடிசம் வரை நீண்டு பூகம்பமாகியது.
கடந்த இரு தினங்களுக்கு முன் கே.என்.நேருவுக்கு, திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியாதல், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடுமீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவின் 4 நிர்வாகிகளை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவின் இல்லத்திற்கு சென்று அமைச்சர் கே.என்.நேரு சமாதானம் பேசியுள்ளார்.
சந்திப்புக்கு பின் அமைச்சர் கே என் நேருவும், திருச்சி எம்பி திருச்சி சிவா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கே என் நேரு தெரிவிக்கையில், நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்பதை அவரிடம் நேரில் சென்று விவரித்துள்ளேன். நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. இனி அதுபோல் நடக்க வாய்ப்பில்லை.
நானும் தம்பி சிவாவும் மனம் விட்டு பேசினோம். தலைவர் ஸ்டாலின் கூறிய அறிவுறுத்தலின்படி இதுபோல் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாது என்று கூறி கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்பி சிவா, நடந்தது நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நடக்கப் போவது நல்லவையாகவே இருக்கட்டும் என்றார்.
English Summary
minister kn nehru mp trichy siva dmk