தேசிய கல்விக் கொள்கையில் நிறைவான கருத்துக்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வதற்கு தயார் - அமைச்சர் பொன்முடி! - Seithipunal
Seithipunal


மாநிலக் கல்விக் கொள்கையின் கொள்கை குழுவின் முடிவு மற்றும் தமிழக கல்வித்துறை எடுக்கும் முடிவையே, பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் என்று, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

மாநில அளவில் கல்விக் கொள்கையை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய கல்வி கொள்கையில் உள்ள நல்லதை ஏற்று கொள்வோம் என்றும், அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இன்று அளித்துள்ள பேட்டியில், மாநில அளவில் கல்விக் கொள்கையை நிர்ணயிக்க குழு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ளார்கள்.

அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் பெறப்படும். துணைவேந்தர்கள் எதனையும் தீர்மானிப்பதில்லை. தமிழக முதலமைச்சர் அவர்கள் தான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.

கல்வித்துறை எடுக்கும் முடிவைத்தான் துணைவேந்தர்கள் பின்பற்றுவார்கள். தமிழகத்திற்காக ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். 

மத்திய அரசின் கல்விக் கொள்கையில் உள்ள குறைகள் நீக்கப்படும். மத்திய அரசின் கல்விக் கொள்கையில் நிறைவான கருத்துக்கள் இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ponmudi say about national education policy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->