உருவாகிறது மு‌.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்.. இயக்குனர் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க உள்ளதாக நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் வெங்கட். மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதனை அடுத்து இவரது பெயர் போஸ் வெங்கட் என அழைக்கப்படுகிறது. தற்போது இவர் திமுக தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார்.

இவர் கன்னிமாடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை எழுதும் பணிகளை அஜய் பாலா மேற்கொண்டுள்ளதாகவும் மு க ஸ்டாலினின் ஒப்புதலுக்காக படக்குழு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்தத் தகவல் திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin biography movie directed by Bose venkat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->