தேர்தல் விதிமீறல் எதுவும் இல்லை - சுட சுட அதிமுகவிற்கு பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் (வரும் 27ஆம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குபதிவய நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேச்சை வேட்பாளர்கள் என் மொத்தம் 77 பேர் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

இன்று காலை 9.30 மணி முதலே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, "கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்" என்று, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, முதல்வரின் இந்த அறிவிப்பு தவறாது, முறையற்றது என்று, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்த அதிமுகவின் இன்பத்துறை புகார் அளித்து இருந்தனர்.

இந்நிலையில், "மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். அது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை" என்று அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Say About Morning Announce Erode election ADMK DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->