கற்றுக் கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி.!  - Seithipunal
Seithipunal


 
பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக் கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே,  சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல.

இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும். 

இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பதுடன்,  ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Say About thothukudi school teacher issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->