பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும்; 
* கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பணி நியமனம் தொடர்பான திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண். 177ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்;  
* தற்போது நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்
* ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பு தளர்வு பணி நியமனம் செய்ய வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 3 நாட்கள் அனுமதி இருந்தும் 2ம் நாளான நேற்றே போராட்டத்தை முடக்கும் பணியை காவல்துறை துவக்கியது. இன்று அவர்களை அல்லல்படுத்தி ஒவ்வொருவரையும் அவர்களின் வீடுகளுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை பேருந்து நிலையத்திற்கும் காவல்துறை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தது.

இதனை தொடர்ந்து ஆசிரியர்கள், போராட்ட குழுவினர் இன்று மாநில தலைமையகத்தில் நம் மக்கள் நீதி மய்ய தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே அவர்களின் கோரிக்கைகள் பக்கம் நிற்பதை சுட்டிக்காட்டி தொடர்ந்து எங்களின் ஆதரவை வழங்குவோம் என்று தலைவர் கமல் ஹாசன் அவர்கள் உறுதி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mnm support teachers protest july


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->