ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், ஆ ராசா-வை இழுத்து கோத்துவிடும் திமுக உடன்பிறப்புகள்.! இதில்., கூடவா உங்கள் அரசியல்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவ மற்றும் 13 பேருடன் இன்று பிற்பகலில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விழுந்து நொறுங்கிய உடன், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. 

உடனடியாக மலைவாழ் கிராம மக்கள் முதலில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இராணுவம், காவல்துறை, மீட்புப்படையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் திமுக உடன்பிறப்புகள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் ஒரே மாதிரியான ஒரு பதிவை தொடர்ந்து பகிர்ந்து வருவது சர்ச்சையாகியுள்ளது. 

அவர்களின் அந்த பதிவில், "இல்லாத  2 ஜியை பற்ற வைத்த பிபின் ராவத் கடைசி காலத்தில் .... நீலகிரி வந்து விபத்து நடக்க வேண்டுமா?அதுவும் 2ஜி ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருக்கும்.. நீலகிரியில் !! விதி எப்படி விளையாடுது ஆழ்ந்த இரங்கல்.." என்ற இந்த பதிவை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilgiris army helicopter crash WITH DMK A RASA SOME VIRAL POST


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->