எங்க கையில ஒன்னும் இல்ல... எல்லாம் மேலிடம் தான் ....!!! - தமிழிசை சௌந்தர்ராஜன் - Seithipunal
Seithipunal


பாஜக - அதிமுக கூட்டணி, 2026  ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலுக்காக அமைய வாய்ப்புள்ளதாக பலத் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கணிக்கும்  வகையில்  பா.ஜ.க  மற்றும் அதிமுக கட்சித் தலைவர்களின் சந்திப்பு தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில்  தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டிஷன் போட்டதாக தகவல் பரவி வருகிறது.இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்ணாமலை:

அதுமட்டுமின்றி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.

புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்வேன், டெல்லி செல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் பணி என்றைக்குமே தொடரும்" என்று தெரிவித்தார்.

தமிழிசை:

இந்நிலையில்  மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,"பாஜக-வில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்தவதை நாங்கள் பின்பற்றுவோம்"என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் அடுத்த தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரம், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர் பரவலாக அடிபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nothing is in our hands Everything is from above Tamilisai Soundararajan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->