புரிதலுக்கு நன்றி - நாதக-விலிருந்து விலகிய சாட்டை துரைமுருகன்! செம்ம டிவிஸ்ட்!
NTK Sattai Duraimurugan Tweet Fun Post
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிவரும் நிலையில், சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உறவுகளுக்கு வணக்கம், நான் கடந்த 14 ஆண்டுகளாய் நாம்தமிழர் கட்சியில் பயணித்து வருகிறேன் என்னால் இயன்ற கட்சிப்பணியை செய்த போதிலும் நான் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் புறக்கணிக்கப்படுகிறேன் அது எனக்கு பெரிய மன உளைச்சலை தந்துள்ளது .
கட்சிக்கு ஆள் சேர் கட்சிக்குள் ஆள் சேர்க்காதே என்று அண்ணன் சீமான் அவர்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை ,அது மட்டுமில்லாமல் கட்டமைப்பு செய்து கிளை வாரியாக ஆட்களை நியமிக்கும் பொறுப்பாளர்களுக்கே பொறுப்பு வழங்கப்படும் என அண்ணன் சீமான் அவர்கள் சொல்வதை அறவே ஏற்க முடியவில்லை . 13 ஆண்டுகளாய் நான் மட்டுமே கட்சி என எனது பகுதியில் அடையாளப்படுத்தி விட்டேன் இப்போது புதிய பொறுப்பாளர்கள் போடுவதை என் மனதில் தாங்கிக் கொள்ள முடியவில்லை .
எல்லா சமூகத்திற்கும் பிரதிநிதித்துவ அடிப்படையில் பொறுப்பு வழங்க சொல்வதும் நிச்சயம் மாவட்ட பொறுப்புகளில் ஆதித்தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்வதையும் என்னால் ஏற்க எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

2021 சட்டமன்ற தேர்தலிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலும் நான் வேட்பாளராகலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது என்னைக் கேட்காமல் வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை .
அது போல கட்சி செலவுகளுக்கு திராவிடக் கட்சிகள் போல மணல் குவாரி மற்றும் டாஸ்மாக் பார்களில் மாதா மாதம் கமிஷன் வாங்கலாம் என நினைத்தால் அதற்கு கடுமையான தடை போடுவதும் மீறி செய்தால் கட்சியை விட்டு நீக்குவதும் ஒரு போதும் ஏற்க முடியாத ஒன்று .
அதைப்போல அண்ணன் சீமான் அவர்கள் என்னை மதிப்பதேயில்லை எனது பெரியம்மா மகளையோடு கணவரின் தங்கை திருமணத்திற்கு அழைத்தேன் அன்றுதான் மாவீரர்நாள் நிகழ்ச்சி என்று போய்விட்டார் அது எனக்கு ஆறாத வலியைத் தந்தது .திருமணத்திற்கு வரவில்லை என்றாலும் எனது அப்பாவுடைய பெரியப்பாவின் மகனின் மாமியார் 92 வயது மூதாட்டி இறந்த நிகழ்வுக்கு ஒரு ஆறுதல் கூடச் சொல்லி அறிக்கை விடவில்லை அது தனிப்பட்ட முறையில் எனக்கு மனச்சோர்வை தந்தது .
நான் வேட்பாளராக நிற்க ஆசைப்பட்டு கேட்டபோது பெண் வேட்பாளரை வேறு சமூகத்தில் நிறுத்தி என்னை புறந்தள்ளி விட்டார்கள் . தேர்தலில் நின்றால் ஒரு விளம்பரம் கிடைக்கும் எனது பகுதியில் எனது செல்வாக்கு கூடும் . அதை வைத்து எனது பகுதியில் கொஞ்சம் வசூல் செய்து நானும் செட்டில் ஆக நினைத்தேன் அதற்கு தடை போடுவதை என்னால் ஏற்க இயலவில்லை மனம் சொல்லோனாத் துயருக்கு ஆளாகி உள்ளது
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட நான் ஒரு முறை அண்ணன் சீமானை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் அன்று அவரை என்னால் பார்க்கவே முடியவில்லை காரணம் அவர் 10 நாள் பயணமாக தென் மாவட்டம் போய்விட்டாராம் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அது என் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது .
இப்போது கூட நான் இரவு 12 மணிக்கு மூன்று முறை அழைத்தும் தலைமையில் யாரும் என் அழைப்பை எடுக்கவில்லை . இப்படிப்பட்ட இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை ஆகவே நான் நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகிகுகிறேன் .

இதுவரை என்னோடு பயணித்த உறவுகளின் புரிதலுக்கு நன்றி. இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது எப்படியும் ச** நீயூஸ் காரன் மோப்பம் பிடிச்சி வருவான் அவர்களிடம் சொல்கிறேன். (டேய் ச** நியூஸ்காரா.. வீட்ட கண்டுபிடிச்சு வந்துருவியா? இல்ல. லொகேஷன் அனுப்பணுமா?) அன்புடன், நான்தான்" என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்
English Summary
NTK Sattai Duraimurugan Tweet Fun Post