சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும் தங்களது பெரும்பணி தொடரட்டும்! அன்புமணி இராமதாசுக்கு சீமான் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்த அன்புமணி இராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தொலைபேசி மூலம் அன்புமணி இராமதாசுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்து செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமை பாதுகாப்புக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Wish PMK Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->