மன்னிப்பு கேட்க முடியாது! அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி அதிரடி கைது!
Omkar balaji arrested
கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், நக்கிரன் இதழின் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி பேசி இருந்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து பின்னர், நீதிமன்ற முன்ஜாமீன் வழக்கு நிலுவையில் விடுவித்தனர்.
இந்த நிலையில், இன்று முன் ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் மன்னிப்பு கோர விருப்பம் இல்லை என ஓம்கார் பாலாஜி என தெரிவித்தார். இதனையடுத்து முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்ற நீதிபதிம், வழக்கு நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும், ஓம்கார் பாலாஜியை காவல்துறை கைது செய்ய தடையில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில், ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.