தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்.. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக அங்கு போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  கட்சியை சார்ந்து வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கின்றனர்.

ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் அ இ அ தி மு கவின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு  தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில்   ரேணுகா உட்பட 77 பேர் அந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும்  தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாக்களிப்பிற்கான நாள் நெருங்கி வருவதால்  அனைத்துக் கட்சியினரும் ஈரோட்டில் முகாமிட்டு தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  வருகின்ற 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் அஇஅதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முக்கிய கூட்டம் நடத்தி வருகிறார். அவரது ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்  அவர்களின் ஆதரவு தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்தக் கூட்டத்தில்  மனோஜ் பாண்டியன் ஜே சி டி பிரபாகர் வைத்தியலிங்கம் உட்பட 87 மாவட்ட செயலாளர்கள்  மற்றும் 176 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தக் கூட்டத்திற்கு பின் இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops organised an urgent meeting with his supporters regarding by election at erode east


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->