பெரம்பலூர் மாவட்ட கழகம் கூண்டோடு கலைப்பு.. ஓபிஎஸ் அதிரடி.!!
OPS removed 17 Perambalur district secretaries from the party
அதிமுகவில் ஏற்பட்ட ஒரு கட்சி பிரச்சனை காரணமாக தற்பொழுது ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தனியாக ஒரு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் 17 பேர் கூண்டோடு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த
1. திரு மு.செந்தில், பொதுக்குழு உறுப்பினர் (குன்னம் சட்டமன்றத் தொகுதி)
2. திரு த.அருண், பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர்
3. திரு குழந்தைவேல், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
4) திரு இலுப்பைக்குடி ரா.ராஜேந்திரன், ஆலந்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
5) திரு ஜெ.தண்டபாணி, வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
6) திரு அ.சிவராஜ், ஆலந்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
7) திரு பா.சோழன், செந்துறை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
8) திரு த.அண்ணாதுரை, செந்துறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
9) திரு பா.ஜாபர் அலி, லப்பைகுடி காடு பேரூர் கழகச் செயலாளர்
10) திரு பரணம் ஆ.மணிகண்டன், மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர்
11) திரு அ.லெனின், மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
12) திரு சு.கமலக்கண்ணன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர்
13) திரு ர.பெரியசாமி, அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர்
14) திரு ஆ.செல்வராஜ், குன்னம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்
15) திரு ஆ.அன்பழகன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி இணை அமைப்பாளர்
16) திரு. தங்கவாசல் வெற்றிவேல், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரின் துணைச் செயலாளர்
17) திரு செ.செல்வமணி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளராக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதால் இவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
OPS removed 17 Perambalur district secretaries from the party