செம்ம டிவிஸ்ட்! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு மனு! சின்னம், கட்சி, எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கலா?!
OPS Side Appeal to EC ADMK EPS Election
அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை ங்கரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதின் ஆவணங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆவணங்கள், உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்ற தீர்ப்புகள் நகல்கள் உள்ளிட்டவைகளை தலைமை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
மேலும், இந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி ரிட் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் இரட்டை இலை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் முறையிட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க பத்து நாட்கள் அவகாசம் வழங்கி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது. பொதுச்செயலாளர் என எடப்பாடி பலன்சியம் தன்னைதானே அறிவித்துள்ளார்.
அதிமுக தொடர்பாக 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடக தேர்தலில் குறுக்குவழியில் சின்னம் பெற முயற்சி நடக்கிறது. எனவே, ஓ.பன்னர்செல்வத்திற்கு இரட்டை இலை ஒதுக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது" என்று அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
OPS Side Appeal to EC ADMK EPS Election