அதெப்படி சும்மா விட முடியும்! ஓபிஎஸ் தரப்பு விவகாரத்தில் நேரடியாக களத்தில் இறங்கிய அதிமுக! - Seithipunal
Seithipunal



கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரின் மனு, அதிமுக வேட்பாளராக ஏற்கப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்து உள்ளதாக, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், இரண்டு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்து இருந்தார்.

அதன்படி, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் கோலார் தங்க வயல் தொகுதியில் களமிறக்கப்பட்ட ஆனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட கே. குமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதில், காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே குமாரை அதிமுகவின் வேட்பாளராக தேர்தல் அதிகாரி ஏற்று கொண்டுள்ளார்.

வேட்பாளர் பெயர் பட்டியலில் வேட்பாளர் குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்த அம்மாநில அதிமுக நிர்வாகிகள், இதுகுறித்து புகார் அளித்தனர்.

மேலும், முறைகேடாக அதிமுகவின் பெயரை பயன்படுத்திய காந்தி நகர் வேட்பாளர் குமாரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS side Candidate Karnataka ADMK Complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->