#BREAKING | பின்வாங்கினார் ஓபிஎஸ்?! வேற வழியே இல்லை, இதான் முடிவு!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டன. அதிமுக தரப்பில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

இதில், அதிமுக வேட்பாளர் போட்டியிடும் புலிகேசி நகர் தொகுதியை தவிர, ஓபிஎஸ் தரப்பில் கோலார் தங்க வயல் தொகுதியில் களமிறக்கப்பட்ட ஆனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட கே. குமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதில், காந்திநகர் தொகுதி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது, அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இன்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்த அம்மாநில அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உரிய விளக்கத்தை தரவில்லை என்றால் வழக்கு அல்லது வேட்புமனு நிராகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான காந்திநகர் தொகுதி மற்றும் கோலார் தங்கவயல் தொகுதி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக, ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி தகவல்தெரிவித்துள்ளார்.. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side Candidate May be vabus KA Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->