#திடீர்திருப்பம் | ஓபிஎஸ்க்கு தேர்தல் அதிகாரி கொடுத்த இன்ப அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட மனுதாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட மனுதாக்கல் செய்த 3 வேட்பாளர்களின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்த நிலையில், தற்போது இரண்டு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓபிஎஸ் தரப்பில் கோலார் தங்க வயல் தொகுதி, காந்திநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஆனந்தராஜ் மற்றும்  கே குமார் ஆகிய வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டுள்ளது.

புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் மனு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் தரப்பில் ஏற்கனவே மூன்று தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது ஓபிஎஸ் தரப்பிற்கு இன்ப அதிர்ச்சி என்றாலும், இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம், அதிமுக வேட்பாளர் என்று கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது. 

அதற்க்கு உண்டான சட்ட நடவடிக்கையை அதிமுக தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side Candidate nomination Accepted


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->