ஓபிஎஸ் அணி உடைகிறது! அதிமுகவில் இணையும் 2 எம்எல்ஏ.,க்கள்! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில், டிடிவி தினகரனை ஓ பன்னீர்செல்வம் சந்திக்க செல்லும்போது ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டவர்கள் செல்லவில்லையே? ஏதேனும் அவர்களுக்கு வருத்தம் இருக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,

"நான் கேள்விப்பட்டவரை அவர்கள் மூன்று பேருமே அதிருப்தியில் இருப்பதாக தான் தெரிகிறது. இவர்கள் மூன்று பேரும் மீண்டும் அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு உண்டான முடிவை அதிமுகவின் தலைமை எடுக்கும்.

எங்களை பொறுத்தவரை இவர்கள் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. ஆனால், பிரதான எதிரிகள் என்று பார்த்தால், எந்த காலகட்டத்திலும் எங்களுடைய இயக்கத்தில் சேர்த்துக் கொள்ள கூடாதவர்கள் என்று பார்த்தால், டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா இந்த மூன்று பேரை தவிர வேறு யார் வந்தாலும் சரி கட்சியின் தலைமை முடிவு செய்யும்" என்றார்.

ஓ பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து நான் இருட்டில் கூட செல்வேன். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியை  நம்பி போக முடியுமா? என்று டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறாரே என்று செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், "இதனை சொல்வது யார் என்று பார்க்க வேண்டும்.

கட்சிக்கு துரோகம் செய்து, அம்மாவுக்கு துரோகம் செய்து, ஒட்டுமொத்தமாக துரோகத்தின் அடையாளமாக இருக்கின்ற டிடிவி தினகரன் அவர் சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறதா? 

ஒன்றரை கோடி தொண்டர்களும் இன்று  எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று கட்சி நடந்து கொண்டிருக்கும்போது, இவர்கள் சொல்வதை எல்லாம் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டிடிவியின் பேச்சை நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும்" என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS SIDE MLAs MAY BE JOINT ADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->