இது மட்டும் நடந்தால் போதும், எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் - ஓபிஎஸ் தரப்பின் பிளான்! - Seithipunal
Seithipunal


ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், "அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கட்சியைவிட்டு எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிடலாம்.

எடப்பாடியிடம் இருப்பது டெண்டர் படை, ஓபிஎஸ்ஸிடம் இருப்பது தொண்டர் படை. ஒற்றைத் தலைமை வேண்டாம், சட்டச்சிக்கல் வரும் என்று அன்றே சொன்னேன், ஆனால் அதையெல்லாம் கேட்காமல் கட்சியை இப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலுக்கு தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி தான்.

அதிமுகவிற்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி, அதற்கான மருந்து தான் ஓபிஎஸ்" என்று மனோஜ் பாண்டியன் பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய மருது அழகராஜ், "இயக்கத்தில் ஒளிய வந்த திருடன், இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறான்; நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ்” என்று பேசினார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், "கட்சியும், சின்னமும் எங்களிடம் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்" என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side plan ADMK EPS 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->