இபிஎஸ்-ன் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் தரப்பு வைத்த பயங்கர டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal



இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது. அதனால் தான் இபிஎஸ் தரப்பினர் சின்னம் இல்லாமல் சாலையில் அலைகின்றனர்" என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பேச்சுக்கு இடமே இல்லை. இரட்டை இலையை நாங்கள் விடவே மாட்டோம். அதற்கான பட்டா வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம்தான்" என்றும்  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாழி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் நான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்றளவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர்தான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

எனவே, எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கோரிக்கை வைக்க உள்ளோம். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து மட்டுமே போதும் என்ற நிலை வந்துவிடும்.

கட்சியும், இரட்டை இலை சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது. அதற்கான பட்டா வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம் தான்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side Say About ADMK Simple issue election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->