பதவியை காப்பாற்ற நினைப்பவர் நாட்டை காப்பாற்றுவாரா? மேடையில் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal



பாராளுமன்றத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அதில் அவர் பேசியதாவது , "மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பதை பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். 

பாஜகவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக் கட்சியினரை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அக்கூட்டணியினரின் வகுப்புவாத குணம், சாதிவெறி ஆகியவற்றை மக்கள் உணர்ந்துள்ளனர். 

மேலும் இஸ்லாமியர்களுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்திய அரசியலமைப்பை மாற்ற இந்தியா கூட்டணி தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதை மக்களே அறிந்துள்ளார்கள். இந்நிலையில் இந்தியா கூட்டணியினர் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என்று கூறி வருகின்றனர்.

 

தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் ஒரு பிரதமர் எப்படி நாட்டை காப்பாற்றுவார்? எனவே வலிமையான பிரதமரைக் கொண்டுவர மக்கள் முடிவு செய்துவிட்டனர். உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி வாக்குவங்கி அரசியல் செய்தது. 

ஆனால் யோகி ஆதித்யநாத் அரசு, மாஃபியாக்கள் மேல் நடவடிக்கை எடுத்து ஏழைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடுகிறது. நான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கப் போவது உறுதி" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Our Nation will not be saved by those PMs PM Modi talk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->