திமுகவில் தொடரும் சாதி பாகுபாடு.. அதை "உதயநிதி அறிந்தே இருப்பார்".. பா.ரஞ்சித் பரபரப்பு ட்விட்.!! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் உதயநிதி நடித்து, தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை கிளப்பியது. 

வழக்கம்போல மாரி செல்வராஜ் திரைப்படங்கள் போன்று தலித் மக்கள் குறித்து பேசும் இந்த திரைப்படம் கொஞ்சம் மாறுபட்டு தலித் அரசியலை பற்றியும் பேசியுள்ளது. சமூக நீதி, சமத்துவம் பேசும் திராவிட கட்சிகளாக இருந்தாலும் அதற்குள்ளும் சாதிய பாகுபாடு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக மாமன்னன் திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. பலதரப்பட்ட மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ள உள்ள இந்த திரைப்படம் குறித்து பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தனது விமர்சனத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?

அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு. உதயநிதி திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார்.

அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PaRanjith tweet about Caste discrimination in DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->