அனைவருக்குமான ஆட்சி நடத்துவோம் - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியாகின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜநாயக கூட்டணி 292 இடங்களில் வென்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமாராகிறார்.

இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம். பி. க்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிய, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அதை வழி மொழிந்தனர். 

மேலும் இக்கூட்டத்தில் என் டி ஏ கூட்டணியின் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜே. பி. நட்டா அறிவித்தார். இதையடுத்து அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இங்கு கூடியுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும், புதிய எம். பி. க்களுக்கும், மேலும் நமது ராஜ்யசபா எம். பி. க்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

22 மாநிலங்களில் என் டி ஏ கூட்டணிக்கு ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பளித்து உள்ளது மிகப்பெரிய ஜன நாயகத்தின் வலிமை. நீங்கள் என்னை நம்பி மீண்டும் இந்த பெரிய பொறுப்பை எனக்கு அளித்துள்ளீர்கள். அதற்கு நான் உங்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். 

இந்திய அரசியல் சாசனத்தின் படி அனைத்து மதங்களையும் சமமாக நடத்தி, அனைவருக்குமான ஆட்சியை நடத்துவோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi Speech in NDA Loksabha Mp Meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->