மொத்தம் 1200 கோடி., திமுக அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் புகார்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய 'பொங்கல் பரிசு தொகுப்பு' வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், கரும்பு, ரவை, கோதுமை உள்ளிட்ட பொருட்களில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர். மேலும் இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறி உள்ளதாக, லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அவரின் அந்த புகாரில், "2 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விடப்பட்டால், அது குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்ற சட்ட விதிகள் உள்ள நிலையில், 1,200 கோடி ரூபாய் அளவில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில், விதிகளை கூட்டுறவு துறை அமைச்சரும், உணவுத்துறை அமைச்சர் பின்பற்றவில்லை" என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், முக்கியமாக இந்தப் பொங்கல் தொகுப்பிலுள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்றும், பொருட்கள்  தயாரித்த நாள் மற்றும் காலாவதியான நாள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இது ஊழலுக்கு வழிவகுத்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளதாகவும் அந்த புகார் மனுவில் சுகுமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal thokuppu issue suthagar complaint


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->