பிரதமர் - முதலமைச்சர் சந்திப்பு!...ராசிமணலில் அணைகட்ட அனுமதி பெற வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பதற்காக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். தொடர்ந்து டெல்லி செல்லும் முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து கல்வி மற்றும் மெட்ரோ திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள்  விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் இன்று  செய்தியாளர்களை சந்தித்து  பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திப்பதாக தெரிவித்தார்.  

மேலும், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும் என்று கூறிய அவர், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டு இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பிரதமரை நாளை முதலமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்த பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister chief minister meeting requirement to get permission to build dam in rsaimanal PR Pandianrequest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->