"ஆதி திராவிடர்" என மடத்தனமாக கருணாநிதியும், திருமாவளவனும் மொழிபெயர்த்தனர்! கொந்தளிக்கும் ஷியாம் கிருஷ்ணசாமி!
PT Shyam condemn to dmk vck Aadhi Dravider
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காலனி என்பது குடியிருப்புப் பகுதி என்பது தான் பொருள், அது எப்படி தீண்டாமையின் அடையாளமாக மாறியதோ… அது போலத் தான் SC, தலித் என்று சாதிகளைத் தொகுத்து வைத்திருப்பதும்.
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் கேட்டபோது, பெயர் மாறினால் முன்னேற்றம் வந்துவிடுமா என்று கேட்டார்கள்… காலனி என்று பெயர் மாறிவிட்டால் அங்கு சிமெண்ட் சாலைகளும், மாடிவீடுகளும் வந்துவிடுமா?
Schedule Caste என்ற ஆங்கில சொற்றொடரைக் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து ‘ஆதி திராவிடர் பிரிவு’ என்று மடத்தனமாக மொழிபெயர்த்தனர். வழக்கத்தில் ‘தலித்’ , ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று சொற்களே பயன்படுத்தப்பட்டது.
என்று புதிய தமிழகம் கட்சி பட்டியல் வெளியேற்றம் கேட்கத் துவங்கியதோ அப்போதிருந்துதான் பட்டியல் சாதிகள் என்று சொல் புழக்கத்தில் வரத் துவங்கியது.
நாங்கள் கேட்கும்போது கொச்சைப் படுத்துவது, தத்திகள் 10 ஆண்டுகள் தாமதமாக வந்து புரட்சி செய்வதைப் போல நாடகமாடுவது.
CIT colony, Officer’s colony, Anna Colony, SaiBaba Colony, Sivanandha Colony’களுக்கு எல்லாம் வராத இழிவும் தீண்டாமை அடையாளமும் ஏன் பட்டியல் சாதி மக்கள் வாழும் ‘Colony’களுக்கு மட்டும் வந்தது?!
பிரச்சனை காலனி என்று சொல்லில் அல்ல… பட்டியல் சாதியினர் என்ற நிரந்தர தீண்டாமை அடையாளத்தோடு பட்டியல் படுத்தியதில் தான்!
தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றம் கேட்க இதுவே காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PT Shyam condemn to dmk vck Aadhi Dravider