பாஜக - திமுகவினரிடையே மோதல்.. ஆளுநருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். 

இந்த தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

இந்த நிலையில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் திமுகவினர் #GetOutRavi என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் "ஆளுநரின் ஆளுமையே நமஸ்தே" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஓட்டியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhukottai BJP Admins support to governor RN Ravi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->