"தமிழக மீனவர்களை கேட்பதற்கு நாதியில்லை.. மத்திய அரசு மதிப்பதில்லை" - ஆர். பி. உதயகுமார் ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal



ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 6) இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு மோதி ராமேசுவரம் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் தலைமை வகித்தார். 

மேலும் இதில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்தையா, மாணிக்கம், சதன் பிரபாகர், மலேசியா பாண்டியன், மீனவப் பிரதிநிதிகள் சகாயம், எம்ரிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், "1974ம் ஆண்டு கச்சத்தீவை எப்போது தாரை வார்த்துக் கொடுத்தோமோ, அப்போதிருந்தே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சிறைபிடிப்புகள், கைது நடவடிக்கைகள் என்று தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வரும்போது தான் மீனவர்கள் மீதான தாக்குதலும் அதிகரிக்கிறது. 

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீனவப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார். இது சுத்த நாடகம் என்று எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை மத்திய அமைச்சரை சந்தித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் 22 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். 

குஜராத் என்றால் மத்திய அரசு உடனே துடிக்கும். ஆனால் தமிழக மீனவர்கள் தானே? அவர்களை கேட்பதற்கு நாதியில்லை. முதலில் தமிழக மீனவர்களை மத்திய அரசு மனிதர்களாகவே மதிக்கவில்லை. தமிழக அரசோ ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியாத ஒரு பொம்மை அரசாகவே உள்ளது" என்று  ஆவேசமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R B Udayakumar Speech About TN Fishermen Issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->