ஜெயலலிதா ஆட்சியில் ஒரு கள்ளச் சாராய மரணம் கூட இல்லை - சசிகலா குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம், மாதவசேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 18ம் தேதி இரவு மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 200க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இந்த சம்பவத்தில் தற்போது வரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுவிலக்கு தடை சட்டத்தில் திருத்தும் செய்து நேற்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்தார். இது குறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, "கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருந்து தப்பிக்கவே திமுக இப்படி ஒரு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடகம் ஆடுகிறது. ஏற்கனவே இதுபோல் கள்ளச் சாராயம் தயாரிப்பவருக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையும், அதோடு ரூ. 5 ஆயிரத்திற்கு குறையாத அபராதமும் விதிக்கப் பட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

அதை தான் திமுக அரசு இப்போது ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் என்று கொஞ்சம் மாற்றி அறிவித்துள்ளது. இது பழைய பாத்திரத்திற்கு புதிதாக முலாம் பூசியது போல் உள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

ஜெயலலிதா ஆட்சியில் ஒரு கள்ளச் சாராய மரணம் கூட தமிழகத்தில் நிகழவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். திமுகவினர் அத்தனை சட்ட விதி மீறல்களையும் செய்து வருகின்றனர். இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Speaks About Spurious Liquor in TN


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->