பெண்களுக்கான ரூ.1000 நிதி உதவி தொகையில் மோசடி! நடிகை சன்னி லியோன் பெயரில் போலி கணக்கு!  - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவி தொகை நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தில், நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்குக்கு மாதம் ரூ.1,000 அனுப்பப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர்தான், நடிகை சன்னி லியோன் பெயரில் கணக்கை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த செய்தி அறிந்த நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தில் இவ்வித மோசடி நடந்து இருப்பது வருந்தத்தக்கது. இது துரதிருஷ்டவசமானது. விசாரணைக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன்” என்று நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sattithishkar Women Fund Scam Sunny Leone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->