தொடர் போராட்டங்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு - தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி.!
seeman thanks to tn govt july
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேரை விடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன்.
இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்"
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
seeman thanks to tn govt july