பிரதமர் மோடியின் தயார் விரைவில் குணமடைய வேண்டும் - இயக்குநர் சீனு இராமசாமி! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று, தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு இராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் அந்த பதிவில், "இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு. பாசத்தில் நிகரற்றது.

எந்நேரமும் தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான்.

மாண்புமிகு பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seenu ramaswamy pray fo pmmodi mom


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->