பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - செந்தில் பாலாஜியை மகிழ்ச்சியாக வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

15 மாதங்களுக்குப் பிறகு நேற்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

குறிப்பாக சாட்சிகளிடம் பேசினாலோ, சாட்சிகளை கலைக்க முயற்சி செய்தாலும் பிணை உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று இரவு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு திமுகவினர் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். 

இன்று இரவு முதலமைச்சர் மு க ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, "பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji meet udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->