செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? அக்.30ல் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் அன்றைய தினமே உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே கவுல் தலைமையிலான அமர்வின் முன்பு ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும், வரும் அக்டோபர் 30-ம் தேதி உரிய அமர்வின் முன்பு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

அதன்படி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அமர்வின் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பட்டியலிடப்பட்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்குமா? அல்லது பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுமா? என்பது தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji bail plea case hearing on oct30 in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->