அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது செப். 20ம் தேதி தீர்ப்பு!
SenthilBalaji bail plea judgment on September 20
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகிய வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணையின் போது "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. அவரின் உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கபில் சிபில் வாதங்களை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமலாக்குத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "ஜாமின் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்து இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SenthilBalaji bail plea judgment on September 20