கவர்னர் சி.பி ஆனந்த் போஸ் மீதான பாலியல் புகார் குறித்து மோடி பேசாதது ஏன்? - மம்தா பானர்ஜி!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மூன்றாம் கட்டவாக்கு பதிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், சந்தேஷ்காலி கலவரம் குறித்து அலறும் பாஜகவினர் மேற்கு வங்க கவர்னர் சி.பி ஆனந்த் போஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறது. எதற்காக கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நிலைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகையில் பணியாற்றிய இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்து என் இதயமே உடைந்து விட்டது. மேற்கு வங்கத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என்று மம்தா பானர்ஜி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sexual complaint against Governor CP Anand Bose Why no talk Modi by Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->