திடீர் திருப்பம்: முதல் ஆளாக சந்தேகத்தை எழுப்பிய முக்கிய புள்ளி.! மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை.!
Subramani Swami Say About Army Helicopter Crash
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது.
ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இன்று அவர்களின் உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக குன்னுர், காட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் சட்டப்பிரிவு 174 என்ற சட்டப்பிரிவின் கீழ் காட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விமானப்படை அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த விமானி வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 இராணுவ வீரர்களின் இந்த மரணத்தில் ஐயம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரின் அந்த பதிவில், "இராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 இராணுவ வீரர்களின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே, இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற ஒருவரின் தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு கொள்கிறேன்" இவ்வாறு அந்த பதிவில் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளளார்.
English Summary
Subramani Swami Say About Army Helicopter Crash