போராட்டம் வாபஸ்! ஸ்டாலினுக்கு நன்றி - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!
teachers association CMStalin protest
தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு இருந்தது.
இதனை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அளித்த பேட்டியில், "எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க குழு அமைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. நாளை நடைபெறும் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்வோம்" என்று தெரிவித்தனர்.
English Summary
teachers association CMStalin protest