முதல்வர் ஸ்டாலின் உங்க பெயரை முதலில் தமிழில் மாற்றுங்கள் - தமிழிசை பதிலடி! - Seithipunal
Seithipunal


ரூபாயை குறியீட்டை மாற்றியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலில் தனது பெயரை தமிழில் மாற்றிக் கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) காலை தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று  தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இதில், ரூபாய் குறியீடுக்கு (₹) பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றதற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும். திமுக அரசின் தோல்விகளை மறைக்க அவர்கள் போடும் நாடகம் தொடர்கிறது.

தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள்? இப்போது ஏன் ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளார்கள்?

திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுகிறது. தேச விரோத மனநிலையுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP Tamilisai Condeamn to DMK MK Stalin Name issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->