அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இத்தனை லட்சம் புதிய மாணவர்களா?  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை கடந்த ஜூன் 13-ஆம் தேதி  தொடங்கப்பட்டது. 

மாணவர் சோ்க்கை தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவா்கள் சோ்ந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 9.40 லட்சம் மாணவர்கள் புதிதாக சோ்ந்துள்ளனா்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம், பொருளாதார சிக்கல், அரசுப்பள்ளிகளில் விலையில்லா பொருட்கள், உயா் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை போன்ற காரணங்களால் பெற்றோா்கள் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கத் தொடங்கியுள்ளனா்.

இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நன்னாளில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்நாள் வரை மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 1 முதல் 12-ஆம் வரை புதிதாக 9.40 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த வகையில், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 7.15 லட்சம் மாணவா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதில்  1-ஆம் வகுப்பில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்". என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt school pre education new students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->