இன்றே கடைசி நாள்... சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த த.மா.கா வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலன் இன்று சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. 

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். 

அ.தி.மு.க., தி.மு.க கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் எஸ்.பி.ஆர். விஜயசீலன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சைக்கிளில் வந்தார். 

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான லக்ஷ்மிபதியிடம் விஜயசீலன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது பா.ஜ.க மாவட்ட தலைவர் உள்பட கூட்டணி கட்சியினர் பலரும் உடன் இருந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin TMC candidate nomination filed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->