பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள் - வாழ்த்திய தவெக தலைவர் விஜய்! - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள் இன்று.

இந்தியாவிற்கு உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்த அன்புமணி இராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தொலைபேசி மூலம் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

சுமார் ஐந்து நிமிடங்கள் இருவரும் தொலைபேசி மூலம் உரையாடிய நிலையில், அன்புமணி இராமதாஸ் அவர்கள், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கும், கட்சிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும் அரசியல் ரீதியாக இருவரும் உரையாடியதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay wish PMK Anbumani Ramadoss Birthday


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->