சமூகநீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சி: அன்புமணி இராமதாசுக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி பிறந்தநாள் இன்று.

இந்தியாவிற்கு உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்த அன்புமணி இராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை : 

"இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அண்ணன் திரு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சர் பொறுப்பில் துறை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அண்ணன் திரு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் அவரது மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவரது மேலான பணிகள் என்றும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பயணிக்கும் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மத்திய அமைச்சர் எல். முருகன்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சகோதரர் திரு. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, தொலைபேசியில் அழைத்து எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு சமரசமின்றி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தங்களது சமுதாயப் பணிகள் தொடர்ந்திடவும், வாழ்வின் அனைத்து விதமான மகிழ்வும், ஆரோக்கியமும் பெற்று இன்புற வாழ்ந்திட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்டநாள் வாழ்ந்து, பொதுமக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் :

இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் சின்னையா திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்வும் மக்கள் பணியும் சிறந்திட அன்புடன் வாழ்த்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Birthday TN Leaders Wish


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->