புவனகிரி பகுதியில் அப்பாவி வன்னியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்; அவரது சட்டையில் இருந்த வன்னியர் அடையாளத்தை மிதித்து, இழிவுசெய்து அதன் காணொலியை சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்; வன்னியர்கள் மீதே பழி சுமத்தி போராட்டம் நடத்தினார்கள்; 'வன்னியர் சங்கத்தலைவரின் தலையை வெட்டுவோம்' என்றார்கள்; 'இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு தான் இருப்போம்' என பகிரங்கமாக அறிவித்தனர்; பொய்வழக்குப் போட்டு 10 வன்னியர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்தார்கள்.
இவ்வாறாக, கடலூர் மாவட்டத்தில் சாதி மோதலை அரங்கேற்றி, அதனை தமிழ்நாடு முழுவதும் பரப்புவதற்கு விசிக சதி செய்கிறது. அந்த சதிக்கு திமுக உதவி செய்கிறது!
வன்னியர்கள் மீது வீண் பழி சுமத்தி, இனஅழிப்பு தாக்குதல் நடத்தும் நோக்கில் இவ்வாறான திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை சாதாரணமாக கடந்து செல்வது, தமிழ்நாட்டை பேரழிவில் தள்ளும்.
“வன்னியபோபியா எனும் இன அழிப்பு சதி!”
மனிதர்கள் குழுவாக வாழ்வதுதான் அடிப்படை இயல்பு. எப்போதும் ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை வீழ்த்தி அவர்களை அடக்கி ஆள்வார்கள். தோற்றுப்போகும் குழுவினரை சுரண்டுவார்கள். காலம் காலமாக மனித பண்பு இவ்வாறு தான் இருக்கிறது (இதனை மாற்றுவதற்காகத்தான் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்கிற கோட்பாடுகள் முன்னிறுத்தப்படுகின்றன!).
இனப்படுகொலை ஒரே நாளில் நடப்பது இல்லை. கட்டுக்கதைகள் தான் மக்களிடத்தில் ஒரு இனத்தைப் பற்றிய தப்பெண்ணங்களை (Prejudice) உருவாக்குகிறது. அந்த தப்பெண்ணம் கொண்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்கும் போது - அவர்கள் இனப்படுகொலை செய்வார்கள் என்பதே உலக வரலாறு உணர்த்தும் பாடம் ஆகும்.
எனவே, திட்டமிட்டு கட்டுக்கதைகளை சுமத்துவது சாதாரணமான செயல் அல்ல. அது அந்த சமுதாயத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ அழித்தொழிப்பதற்கான இனப்படுகொலை செயல்திட்டத்தின் முதல் படிநிலை ஆகும் (Genocide - intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such).
வன்னியர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் மிகப்பெரிய சதியின் பின்னணியாக ‘வன்னியபோபியா’ என்கிற மனநோய் இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள இந்த விரிவான கட்டுரையை முழுமையாக படியுங்கள்:
“வன்னியபோபியா என்றால் என்ன?”
'இஸ்லாம்போபியா' (ISLAMOPHOBIA) என்பது உலகெங்கும் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. இச்சொல்லை பெரும்பாலானவர்கள் அறிந்துள்ளார்கள். இது முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வையும் வெறுப்பு நடவடிக்கைகளையும் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
அதே போன்று வன்னியபோபியா (VANNIYAPHOBIA) என்கிற ஒரு மனநோய் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பலராலும் கடைபிடிக்கப்படுகிறது. வன்னியர் சமூகத்தினர் செய்யாத, அல்லது அவர்களுக்கு தொடர்பே இல்லாத குற்றங்களை, பழிகளை எல்லாம் அவர்கள் மீது கட்டுக்கதையாக திட்டமிட்டு சுமத்துகிறார்கள்.
"வன்னியபோபியா எடுத்துக்காட்டுகள்"
1. திறமை:
வன்னியர்களில் திறமைசாலிகள், சாதனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பவர்கள், அவருடன் பணியாற்றுபவர்களாலும் உயரதிகாரிகளாலும் அவரது சாதி என்னவென்று தெரியாதவரை மதிக்கப்படுவார்கள். எப்போது அவர் வன்னியர் என்பது மற்றவர்களுக்கு தெரிகிறாதோ, அப்போதே திட்டமிட்டு முடக்கப்படுவார்கள்! இது எல்லா துறையிலும் நடக்கிறது.
2. திரைப்படம்:
சினிமா துறையில் முன்னேறத்துடிக்கும் திறமைசாலிகள் பலர் - அவர்கள் வன்னியர்கள் என்று தெரிந்தவுடன் திட்டமிட்டு முடக்கட்டுள்ளார்கள். எல்லா திறமையும் இருந்தும் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளார்கள். அரசு அலுவலர்களில் பலர் அவர்கள் வன்னியர்கள் என்கிற ஒரே காரணத்தால் - பதவி உயர்வுகளில் இருந்து பழிவாங்கப்பட்டுள்ளார்கள். நிர்வாக பணியிடங்களில் பலராலும் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.
3. தொழில்:
தமிழ்நாட்டின் எல்லா தொழில்களும் 'சாதி கூட்டமைப்பு' செயல்பாடுகள் மூலம் தான் நடக்கிறது. பெரும் தொழில் கூட்டமைப்புகள் அனைத்தும் வெளிப்பார்வைக்கு தான் தொழில் அமைப்புகள் ஆகும். உண்மையில் உள்ளே நடப்பது சாதி அரசியல் மட்டும்தான். அங்கும் வன்னியர்கள் என்று தெரிந்தவுடன் எல்லா வகையிலும் ஓரங்கட்டுகிறார்கள்!
4. ஊடகம்:
தமிழக ஊடகங்கள் எதிலும் வன்னியர் ஒருவர் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய முடியாது. அவ்வாறு உள்ளே சென்ற ஒரு சிலரும் தாங்கள் வன்னியர் என்று தெரிந்த பின்னர் சுதந்திரமாக பணியாற்றுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை.
5. அரசியல்:
அரசியலில் காலம் காலமாக வன்னியர்களை ஓரம்கட்டுவது நடந்து வருகிறது. அதிலும் ‘உழைப்பதற்கு வன்னியர்கள், உயர் பதவிகளுக்கு மற்றவர்கள்’ என்பதே வரலாறு ஆகும். சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்ற வன்னியர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஓரம் கட்டப்பட்டார்கள். ராமசாமி படையாட்சியாரும் மாணிக்கவேல் நாயகரும் தனி அரசியல் கட்சி தொடங்கியதே காங்கிரஸ் கட்சியின் வன்னியர் புறக்கணிப்புக்கு எதிராகத்தான்.
6. திராவிடம்:
திராவிட அரசியலிலும் - போராட வன்னியர்கள், அரசியல் பதவிக்கும் அரசு பதவிக்கும் மற்றவர்கள் என்கிற வழியை பின்பற்றின.
7. தமிழ்த்தேசியம்:
தமிழ்த்தேசியம் என்கிற கருத்தை முன்வைத்து போராடியவர்களும் அதற்காக உயிர்துறந்தவர்களும் பெரும்பாலும் வன்னியர்கள் தான். அதனை இன்றைக்கு தமிழ்த்தேசியம் பேசுவோர் மறந்தும் சுட்டிக்காட்ட மாட்டார்கள்.
8. சுதந்திரப் போராட்டம்:
சுதந்திர போராட்ட வரலாற்றிலும் மிகப்பெரிய தியாகங்களை செய்த வன்னியர்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டார்கள். சாமி நாகப்பன் படையாட்சி, அஞ்சலை அம்மாள், ஜமதக்னி, ஆதிகேசவ நாயகர் - இவ்வாறான பல உண்மை சுதந்திர போராட்ட தியாகிகள் தமிழக வரலாற்றில் இடம்பெறவில்லை!
9. வரலாறு:
தமிழ் மன்னர்கள் வரலாற்றிலும் - சேர, சோழ, பாண்டியர் என்று பேசுவோர் அதற்கு பின்னால் சுமார் 200 நூற்றாண்டுகள் தமிழ்நாட்டை காத்து நின்ற காடவராயர்களையும் சம்புவராயர்களையும் பேசமாட்டார்கள். இதற்கான ஒரே காரணம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இன்றைய சாதிப்பெயர்களை நேரடியாக பயன்படுத்தவில்லை. காடவராயர்களும் சம்புவராயர்களும் தம்மை வன்னியர்கள் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார்கள். அதனாலேயே அவர்களின் வரலாறு பேசப்படவில்லை!
இவ்வாறான "வன்னியபோபியா" சுமார் 500 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திட்டமிட்டு வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
"வன்னியபோபியா" வரலாற்று பின்னணி என்ன?
வன்னியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுக்கு – வன்னியர்கள் ஒரு பெரும்பான்மை சமூகமாக இருப்பது காரணம் இல்லை. ஏனெனில், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் பெரும்பான்மை சமூகங்கள் ஓரம் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வாறு நடக்கிறது!
மாறாக, வன்னியர்கள் அதிகாரத்தில் இருந்தும் வாய்ப்புகளில் இருந்தும் வஞ்சிக்கப்பட்டதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. அவற்றை விரிவாக காண்போம்:
“இனப்பகை”
இனக்குழு அடிப்படையிலான வரலாற்று ரீதியிலான இனப்பகை வன்னியர்கள் மீதான வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம். மேலும், அதிகாரத்தில் இருந்தும் வாய்ப்புகளில் இருந்தும் வன்னியர்களை வெளியேற்றுவதன் மூலம் – வன்னியர்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் சில சமூகங்களுக்கு இந்த வெறுப்பு நன்மையாக இருப்பதும் ஒரு வசதியாகும்!
“வரலாற்று பின்னணி”
வன்னியர்கள் தமது தோற்றத்தொன்மமாக நம்பும் அக்னிவம்ச தொன்மம் சங்க இலக்கியமான புறாநானூற்றில் இடம்பெற்றுள்ளது. வன்னியர்களின் வழிபாட்டு மரமாக இருக்கக் கூடிய வன்னி மரம் - தமிழர்கள் வசித்தாக நம்பப்படும் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இடம்பெற்றுள்ளது.
போரில் ஈடுபடுவதுதான் வரலாற்று ரீதியில் வன்னியர்களின் முதன்மை தொழிலாக இருந்தது. பேரரசுகளின் போர்ப்படையில் வன்னியர்கள் முதன்மையாக இடம்பெற்றார்கள். பல்லவர்களின் படைகளிலும் சோழர்களின் படைகளிலும் பெரும் பங்காக வன்னியர்கள் இருந்தார்கள், படைத்தளபதிகளாக வன்னியர்கள் இருந்தார்கள், பேரரசுகளுடன் திருமண உறவில் வன்னிய தளபதிகள் இருந்தார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
அகில இந்தியாவிலும் மொகலாயர்களோ, வேற்றுமொழி மன்னர்களோ ஆதிக்கம் செலுத்தமுடியாத ஒரு நாடாக வட தமிழ்நாடு வெகுகாலம் நீடித்ததற்கு வன்னியர்கள் மிக முக்கியமான காரணம் ஆகும். விஜயநகர பேரரசு தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன்பு காலம்காலமாக தமிழ்நாடு தனித்திருந்ததற்கு வன்னியர்கள் பங்காற்றியுள்ளனர். மேலும், சிங்கள மன்னன் பராக்கிரமபாகு தென் தமிழ்நாட்டை கைப்பற்றிய போது, அவனை தோற்கடித்து தமிழ்நாட்டை விட்டு விரட்டியது மட்டுமல்லாமல், இலங்கைக்குள் புகுந்து சிங்களர்களை தோற்கடித்ததும் வன்னிய தளபதிகள் தான்!
வன்னியர்களின் தோற்றத்தொன்மமான வன்னிய புராணம் – தமிழ் பேரரசர்கள் நடத்திய மாபெரும் போர்களின் புராண வடிவம் ஆகும். வன்னியர்களின் தனிப்பட்ட வழிபாட்டு அடையாளமாக உள்ள திரௌபதி அம்மன் வழிபாடு முழுக்க முழுக்க ஒரு போர் அடையாளம் ஆகும். திரௌபதி அம்மன் கோவிலில் உள்ள போத்தராஜாவும் முத்தால இராவுத்தனும் போர்வீரர்கள் தான். திரௌபதி அம்மன் பாரதக் கதையும், தெருக்கூத்தும் முழுக்க முழுக்க போர் வரலாறு தான். மேலும், முற்காலத்தில் போர்க்காலத்தில் இடம்பெயரும் வகையில் மரத்தால் ஆன சிலைகளால் திரௌபதி அம்மன் கோவில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பேரரசுகளின் வீழ்ச்சிக்கு பிறகான தமிழ்நாட்டில், குறிப்பாக வடக்கு தமிழ்நாட்டில் வன்னியர்கள் மிக வலுவான சமூகமாக இருந்தார்கள். காடவராயர்களும் சம்புவராயர்களும் வடதமிழ்நாட்டில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தினார்கள். தெற்கே காவிரி ஆறு தொடங்கி வடக்கே ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் வரை பரந்துவிரிந்த வன்னிய நாட்டினை அவர்கள் கட்டமைத்தார்கள்.
ஒரு அன்னிய படை முதன்முதலாக வட தமிழ்நாட்டினை வெற்றி கோண்ட நிகழ்வான, விஜயநகர தளபதி குமார கம்பணன் படையெடுப்பின் போது – “வன்னிய ராஜாக்களை தோற்கடித்து வன்னிய நாட்டை வெற்றி கொள்வது” தான் அவனது நோக்கம் என்று அவனது மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் எனும் சமற்கிருத நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது குமார கம்பணன் மூலமாக வடதமிழ்நாடு முதன்முதலாக தோற்கடிக்கப்படும் போது, இங்கே வன்னிய ராஜாக்கள் ஆட்சி செய்தனர். அவர்களின் நாடு, அதாவது வட தமிழ்நாடு ‘வன்னிய நாடு’ என்று அழைக்கப்பட்டது!
“வன்னியர் வீழ்ச்சிக்கான வரலாற்று காரணங்கள்”
காரணம் 1: விஜயநகர பேரரசு
விஜயநகர பேரரசு 1362-ல் ஏற்பட்ட பின்னர் வன்னியர்கள் போர் தொழிலில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர். பல வன்னிய சிற்றரசர்கள் வீழ்த்தப்பட்டனர் (காந்தவராயன், சேந்தவராயன் போன்று). வன்னியர்களை வீழ்த்திய வீரன் என கிருஷ்ண தேவராயருக்கு பட்டம் சூட்டப்பட்டது.
ஒருசில வன்னிய சிற்றரசர்கள் தெலுங்கு நாயக்கர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக பின்னர் மாறினர் (உடையார் பாளையம், பிச்சாவரம் போன்று). பல ஊர்களில் பாடிக்காவல் எனும் காவல் வரி வசூலிக்கும் உரிமைப்பெற்ற உள்ளூர் ஆட்சியாளர்களாக வன்னியர்கள் ஆங்கிலேயர் காலம் வரை ஓரளவுக்கு செல்வாக்குடன் இருந்தனர்!
காரணம் 2: "வலங்கை - இடங்கை சாதிகள் மோதல்"
தமிழ்நாடு பெரும் சாதி சண்டைகளை காலம்தோரும் சந்தித்து வந்திருக்கிறது. சோழர்களின் வீழ்ச்சியில் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி வரை சுமார் 800 ஆண்டுகள் - சாதி மோதல்கள் பெருமளவு நடந்துள்ளன. வலங்கை 98 சாதிகள் - இடங்கை 98 சாதிகள் என பிரிந்து தமிழக மக்கள் காலம்தோரும் மோதி வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் சாதிப்பெருமை கலவரக்காலம் இதுவாகும். நாட்டை ஆண்ட சோழமன்னனே இந்த மோதலில் கொலை செய்யப்பட்டான்.
வலங்கை - இடங்கை சாதி மோதல்கள் என்பவை - திருமணம், திருவிழா போன்ற நிகழ்வுகளில் ஊர்வலங்கள் எவ்வாறு செல்ல வேண்டும், குடைபிடித்தல், கொம்பு ஊதுதல் போன்றவற்றில் எந்த சாதிக்கு என்ன உரிமை என்பனவற்றுக்காக நடந்த சண்டைகள் ஆகும்.
வலங்கை - இடங்கை சாதிகளில் வன்னியர்கள் பெரும்பாலும் எந்தக் கட்சியிலும் இல்லை. சில இடங்களில் வலங்கை சார்பாகவும் சில இடங்களில் இடங்கை சார்பாகவும் வன்னியர்கள் போராடியுள்ளனர் (அதாவது வன்னியர்கள் 98 சாதிகள் பட்டியலில் இல்லை). பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஆதரவாக வன்னியர்கள் நீதிக்கேட்டு மோதலில் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு, தமக்கு நேரடியாக தொடர்பில்லாத சண்டையில் நீதி கேட்கப் போய் வன்னியர்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.
1844 ஆம் ஆண்டில் சிதம்பரம் நகரில் வெள்ளாளர் தெரு வழியாக சென்ற செங்குந்தர் வகுப்பினரின் திருமண ஊர்வலத்தின் மீது வெள்ளாளர்கள் தாக்குதல் நடத்தினர். செங்குந்தர்கள் பிச்சாவாரம் பாளையக்காரர்களிடம் நீதி கோரினர். பிச்சாவரம் மன்னர் சாலைகள் எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்லி செங்குந்தர்களை ஆதரித்தார். இதனால், வன்னியர்களும் செங்குந்தர்களும் ஒரு அணியாகவும், வெள்ளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் மறு அணியாகவும் பிரிந்து மோதிக்கொண்டனர்.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தை வெற்றிபெறாததால், அரசாங்க கட்டிடங்களை மட்டும் பாதுகாத்துக்கொண்டனர். சிதம்பரம் நகரம் போர்க்களமாக மாறியது. பலர் கொலைசெய்யப்பட்டனர். பிச்சாவரம் மன்னர் வெற்றிபெற்றார். இந்த சண்டையின் காரணமாகவே, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பிச்சாவரம் மன்னர்களுக்கு அளித்துவந்த பல ஆயிரம் ரூபாய் ஜமீன் மானியத்தை நிறுத்தினர். பிச்சாவரம் மன்னர்களின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம்.
காரணம் 3: "வன்னியர் நிலங்கள் பறிப்பு"
1799 ஆம் ஆண்டில் பிறந்தவராகக் கருதப்படும் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் வன்னியர்களின் பூர்வீக நில உரிமையை காப்பாற்றுவதற்காக பெரும்பாடு பட்டவர் ஆகும்.
வட தமிழ்நாட்டில் மன்னவேடு என்கிற பெயரில் பெரும்பாலான கிராமங்கள், அந்த கிராமங்களில் வசித்த வன்னியர்களின் சொத்தாக இருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் பட்டா முறையை கொண்டுவந்த போது, அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் - சில முற்பட்ட சமூகத்தவர்களின் பெயர்களில் இந்த நிலங்களை மாற்றி எழுதிக்கொண்டனர் என குற்றம் சாட்டினார் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். இதனை சுட்டிக்காட்டி 1872-ல் "பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகியிருக்கிற விவாதம்" என்கிற நூலை அவர் எழுதியுள்ளார். (அவரது 1882-க்கு பின்னர் வந்த கட்டுரைகளை தந்தை பெரியாரின் சீடர் வே. ஆனைமுத்து அவர்கள் விரிவான நூலாக வெளியிட்டுள்ளார்.)
நில உரிமைக்காக பெரும் போராட்டத்தை தனிமனிதராக நடத்தியவர் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். லண்டனில் வெளிவந்த ஆங்கில பத்திரிகைகளில் இதனை செய்தியாக வெளியிட செய்து, பிரிட்டிஷ் மகாராணியே விசாரணைக் குழுவை அனுப்பும் அளவுக்கு போராடினார் அவர். ஆனால், விசாரணைக்கு முதல் நாள் கூத்து பார்த்து, குடியில் மூழ்கி, அக்காலத்திலேயே வன்னியர்கள் சாட்சி சொல்லவராத கொடுமையும் நடந்தது. (அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரின் போராட்டம் - வன்னியர்களின் ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிந்தது)
காரணம் 4: "சாதி மேனிலை பறிப்பு"
'ஆண்ட பரம்பரை' என்கிற நிலையில் 15 ஆம் நூற்றாண்டு வரை இருந்த வன்னியர்கள் அதன் பின்னர் படிப்படியாக அதிகாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு - 19 ஆம் நூற்றாண்டில் 'அடிமை சாதி' எனும் நிலைக்கு தள்ளும் மிகப்பெரிய சதி நடந்தது (அந்தக்காலத்தில் தாழ்ந்த சாதி என்பது - சாதி மக்களை ஒதுக்கி வைப்பதாகும். இன்று போல உரிமை அளிப்பது அல்ல).
பறையர், பள்ளர், பள்ளி என ஒடுக்கப்பட்ட சாதிகளில் வன்னியர்களும் ஒரு சாதி என்கிற சதிவலை 19 ஆம் நூற்றாண்டில் பின்னப்பட்டது. இந்த சதிக்கு எதிராகவே வன்னியர்களின் முதல் ஒற்றுமை ஏற்பட்டது.
இந்த சதிக்கு எதிராக 1870 ஆம் ஆண்டு வாக்கில் ஒன்றிணைந்த வன்னியர்கள் 1885 ஆம் ஆண்டு வன்னிய குல சத்திரிய மகா சங்கத்தை தொடங்கினர் (அதே ஆண்டுதான் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியும் தொடங்கப்பட்டது). (மகா சங்கத்தை பதிவு செய்த ஆண்டு 1888) தென்னிந்தியா, வட இந்தியா, தென் ஆப்பிரிக்கா என பல பகுதிகளில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் அந்தக் காலத்திலேயே வளர்ந்து நின்றது.
பறையர், பள்ளர், பள்ளி என்கிற பட்டியலில் 'பள்ளி' இல்லை. நாங்கள் 'வன்னிய குல சத்திரியர்கள்' என்கிற உண்மையை முன்வைத்து, ஆங்கிலேயரின் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மாற்ற அந்த சங்கம் போராடியது. அந்த சங்கம் சேகரித்த பணம் போடப்பட்டிருந்த வங்கி திவால் ஆனதால் - சங்கமும் தேய்ந்து போனது.
கடைசியாக 1929-ம் ஆண்டு, ஜூன் மாதம் 13-ம் தேதி சென்னை மாகாண அரசாங்கம், தமிழ் பேசும் பகுதிகளில் வாழும் வன்னியர்களை "வன்னியகுல சத்திரியர்கள்' என்றும், தெலுங்கு பேசும் பகுதியில் வாழும் வன்னியர்களை 'அக்னிகுல சத்திரியர்கள்' என்றும் அறிவித்து அரசாணை வெளியிட்டது.
வன்னிய குல சத்திரிய மகா சங்கம் வன்னியர் ஒவ்வொருவர் வாழ்விலும் இப்போதும் வாழ்கிறது. இன்று சாதிச் சான்றிதழில் "வன்னிய குல சத்திரியர்" என்று சாதியின் பெயர் இருப்பதற்கு அந்த சங்கம் தான் காரணம்.
காரணம் 5: "அரசியல் வீழ்ச்சியும் எழுச்சியும்"
சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட அரசியல் என எல்லாவற்றிலும் வன்னியர்கள் ஓரம் கட்டப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த வீழ்ச்சியில் இருந்து ஓரளவுக்கு விடுதலை அடைந்து வன்னியர்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளத்தை மருத்துவர் அய்யா அவர்கள் உருவாக்கினார்கள். மேலும், கல்வி, பொருளாதார தளங்களில் கணிசமான வாய்ப்பை இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவர் அய்யா அவர்களே பெற்றுத்தந்தார்கள்.
"வன்னியபோபியாவை ஒழிப்பது எப்படி?"
வன்னியபோபியா என்பது ஒரு மனநோய்; வெறுப்புக் குற்றத்தின் ஒரு வடிவம்; அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முதன்மை தடை ஆகும். இந்த மனநோயை ஒழித்துக்கட்ட வேண்டியது முதன்மையான ஒரு தேவை ஆகும்.
நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். காலம் ஒருபோதும் பின்னோக்கிப் போகாது. இன்றைய காலத்தில் ஆயுத பலம் வெற்றியை தீர்மானிக்காது. அரசியல் பலம் ஒன்றுதான் அனைத்தையும் மாற்றும்.
சதியை சதியால் எதிர்கொள்வது என்கிற வழிமுறை வன்னியர்களுக்கு எக்காலத்திலும் கைவந்தது இல்லை! எனவே, வன்னியபோபியா என்கிற வெறுப்பினை வெறுப்பால் எதிர்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
வன்னியர்களின் நிலம் மற்றவர்களால் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடிய அத்திப்பாக்கம் வெங்கடாச்சலம் நாயகர், எல்லா சமூகங்களும் சமமாக வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்தினார். சுதந்திர போராட்ட காலத்தில் வகுப்புவாரி உரிமைக்காக முன்னின்று போராடி, பிற்படுத்தப்பட்டோர் என்கிற பட்டியலை அகில இந்திய அளவில் முதலில் உருவாக்கியவர்கள் வன்னிய தலைவர்கள் தான். ராமசாமி படையாட்சியார் அவர்கள் தான் தமிழ்நாட்டில் குலக்கல்வி முறையை ஒழித்து கல்வியில் சமத்துவத்தை நிலைநாட்டினார்.
எல்லா சமூகங்களுக்கு சம உரிமை என்கிற கோரிக்கையை வலிமையாக முன்னிறுத்தி, அதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அயராது போராடி வருபவர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தான். தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும், அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு கல்வியில் இட ஒதுக்கீட்டையும் சாதித்த சாதனைத் தலைவர் அவர் தான்.
இனக்குழுக்களின் இனவெறி வரலாற்றை மாற்ற - ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்கிற கோட்பாடுகளை முன்னெடுப்பது போல, தமிழ்நாட்டில் நீடிக்கும் சாதி வெறுப்பிற்கு மாற்றாக, சமூகநீதி. சமத்துவம், ஜனநாயகம் என்கிற கோட்பாடுகளை மருத்துவர் அய்யா அவர்கள் முன்வைக்கிறார்கள். எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்பதே அய்யா அவர்களின் நோக்கம் ஆகும்.
அதாவது, #வன்னியபோபியா எனும் ஒரு சாதியை வஞ்சிக்கும் மோசமான போக்கிற்கு எதிராக எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் முற்போக்கான பார்வையை முன்வைப்பதே வன்னியர்களின் அரசியல் ஆகும்.
வன்னியர்கள் எல்லோரும் ஓரணியில் ஒன்று திரண்டு அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது ஒன்று தான் வன்னியபோபியாவை ஒழிக்கும். யாரையும் ஒதுக்காமல், எல்லா சமூகங்களுக்கும் சம அதிகாரத்தை அளிக்கும்.
நம்முடைய காலத்திலும், எதிர்காலத்திலும் சாதி, மதம், மொழி அடையாளங்களுக்காக யாரும் யாருடனும் மோதக்கூடாது. எல்லோரும் மற்ற எல்லோரது அடையாளத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். எந்தவொரு சாதியையும், எந்தவொரு மதத்தையும், எந்தவொரு மொழியையும் - எதற்காகவும் இழிவு செய்யக்கூடாது. எல்லோரும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்பதே மருத்துவர் அய்யா அவர்களின் நிலைப்பாடு.
பன்முகத்தன்மையை (Multiculturalism) போற்றுவதும் நல்லிணக்கத்தை (Solidarity) காப்பதும் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும் சமூக ஜனநாயக (Social Democracy) கோட்பாட்டின் முக்கிய அங்கங்கள் ஆகும்.
#VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars”
பாமக அருள் இரத்தினம் பதிவிலிருந்து...