உயிர் தப்பிய விமானி வருண் சிங் பெங்களூர் வந்தடைந்தார்.! நேரம் குறித்த மருத்துவர்கள்.!
Varun Singh in Bangalore
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ராணுவப் படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த விமானி வருண் சிங்கை உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள ராணுவ கல்லூரியில், குரூப் கேப்டன் விமானி வருண் சிங்கிற்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்டு வரும் போது வரும் பொழுது அவருக்கு 80 85 சதவீத தீக்காயங்கள் இருந்ததாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமாக இருந்தாலும், அவரின் உடல் பாகங்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ குறிப்புகள் தெரிவித்த தகவலின்படி, உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஆனால் அவரின் முக்கியமான உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், மூளை நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் கருகி இருப்பதால், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு போதுமான அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாற்பத்தி எட்டு மணி நேரம் கடந்துவிட்டால் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அவருக்கு மேல் மேலும் சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூர் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை பார்த்த ஒரே நபர் விமானி வருண் சிங் மட்டும்தான், அவர் ஒரு சிறந்த விமானி என்பதாலும், அவரிடம் இருந்து பெறப்படுகின்ற தகவல்கள் விசாரணைக்கு முழுவதாக தேவைப்படுகிறது என்பதாலும், அவரை அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முழு நடவடிக்கைகளை இந்திய ராணுவ மருத்துவர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.