கூட்டத்தில் பொங்கி எழுந்த விஜய பிரபாகரன் - திமுக, விசிக மீது கடும் தாக்கு!
Vijaya prabhakaran got angry in the crowd hard attack on dmk vck
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தே.மு.தி.க. சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், செழிப்பாக இருந்த தேனி மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், வெள்ளையனே வெளியேறு என்று போராடி மகாத்மாகாந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக தெரிவித்த அவர், தற்போது கொள்ளையனே வெளியேறு என்று போராடி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்காக அவர் சிறை சென்றாரா என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தான் செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார்.
மேலும், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டை வரவேற்பதாக தெரிவித்த விஜய் பிரபாகரன், உங்கள் கூட்டணியில் உள்ள ஸ்டாலினிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி, இதெல்லாம் ஒரு நாடக அரசியல் என்று விமர்சித்தார்.
English Summary
Vijaya prabhakaran got angry in the crowd hard attack on dmk vck