நாடு முழுவதும் பாஜகவிற்கு ஆப்பு! மம்தா பானர்ஜி உற்சாகம்!
West Bengal Chief Minister Mamata Banerjee has created an anti BJP situation across the country
நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான நிலை உருவாக்கியுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியாவில் உள்ள7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் மூன்று பாஜக தொகுதிகளை வெற்றி பெற்றது இல்லாமல், மொத்த நான்கு தொகுதிகளையும் திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.
இந்தநிலையில், இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது, இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் வெற்றி. மக்கள் மீதான சமூகப் பொறுப்புக்கான கட்சியின் அற்பணிப்பை புதுப்பிக்கும்.
நாடு முழுவதும் ஆளுங்கட்சி பாஜகவுக்கு எதிரான நிலை உருவாகியுள்ளது. மத்திய பிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
English Summary
West Bengal Chief Minister Mamata Banerjee has created an anti BJP situation across the country