சாமி கும்பிட வந்த பெண்ணுடன் பூசாரிக்கு கள்ளக்காதல்! கொடூரமாக அரங்கேறிய கொலை! - Seithipunal
Seithipunal


மும்பையில் 36 வயது மதிக்கத்தக்க, இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த, 56 வயது நபர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேகவைத்து வீசிய சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி தெலுங்கானாவில் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் வசித்து வருகிறார் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சம்ஷாபாத்தில் உள்ள கோவிலுக்கு, அப்சரா என்ற பெண் தொடர்ந்து சுவாமியை தரிசனம் செய்ய வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அபோது அப்சராவுக்கும் - பூசாரி சாய்க்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. நாளைடைவில் இந்த தொடர்பு கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. இருவரும் அதன்பின்னர் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு பிறகு , தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு பூசாரி கிருஷ்ணாவை அப்சரா கேட்டுள்ளார். ஆரம்பத்தில் காரணம் மேல் காரணம் சொல்லி கிருஷ்ணா சமாளித்து வந்துள்ளார்.திருமணம் செய்துக்கொண்டே ஆக வேண்டும், அப்போது தான் பேசுவேன், பார்க்க வருவேன் ,என அக்சரா பிடிவாதம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த சாய் அப்சராவை கொலை செய்வது தான் பிரச்சினை வராமல் இருக்க ஒரே வழி என்று முடிவு செய்தார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நற்குடா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பூசாரியின் சதி செயலை அறியாத அந்தப்பெண் அவருடன் இயல்பாக சென்றுள்ளார். இந்நிலையில் பூசாரி அப்சராவின் தலையை பிடித்து சுவற்றில் மோதி அடித்துள்ளார். நிலைத்தடுமாறி கீழே விழுந்த அப்சராவின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார்.

அப்சராவின் உடலை அப்படியே விட்டுச்சென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என எண்ணிய சாய் , அருகில் இருந்த கடையில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி அதில் அந்தப் பெண்ணின் உடலை மூட்டைக் கட்டியுள்ளார். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மூடியை திறந்து ,உடலை அதில் வீசி சென்றுள்ளார்.

அதன்பின் நேராக காவல் நிலையம் சென்று அப்சரா என்ற பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். சம்பந்தமில்லாத நபர் தாமாக முன்வந்து புகார் அளித்த காரணத்தால் போலீசாருக்கு பூசாரி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே சாய் கிருஷ்ணாவிடம் போலீசார் தங்கள் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை பூசாரி போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் பூசாரியை வைத்து நேரடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவில் பூசாரி சாமி கும்பிட வந்த பெண்ணிடம் தொடர்பு வைத்து அவரை கொலை செய்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Girl Murdered By Priest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->